தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
அதாவது படத்தில் ஆனந்தராஜ் மற்றும் வடிவேலு கடத்தல் கார்களாக நடித்துள்ளார்கள். இதில் ஆனந்தராஜ் பணத்திற்காக பெண்களை கடத்த, வடிவேலு விலை உயர்ந்த வந்த நாய்களை கடத்துகிறார். அப்போது எதிர்பாராத விதமாக வடிவேலு ஆனந்த்ராஜின் நாயை கடத்தி விடுகிறார். இதனால் ஆனந்த்ராஜ் வடிவேலுவை நாய்களை இனி கடத்தக் கூடாது என எச்சரிக்கிறார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் வடிவேலுவின் பாட்டி தன்னுடைய குடும்பத்தில் ஒரு நாய் இருந்ததாகவும் அந்த நாயின் மூலமாக நம்முடைய குடும்பம் வளர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த நாய் தொலைந்து விட்டதால் நாயை தேடும் முயற்சியில் வடிவேலு ஈடுபடுகிறார்.
இந்த நாயை வடிவேலு மீட்டாரா என்பதுதான் படத்தின் மீதி கதை. அதன் பிறகு படம் முழுக்க முழுக்க வடிவேலு தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் அட்டகாசமான காமெடியில் பின்னி பெடல் எடுத்துள்ளார். வடிவேலுவின் காமெடி வேற லெவலில் இருக்கிறது. இதேபோன்று சக நடிகர்களும் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். படத்தின் ஒரு பகுதி சற்று சுமாராக சென்று கொண்டிருந்தாலும் அடுத்த பகுதி விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும், காமெடி ஜானாராகவும் இருக்கிறது. மேலும் மொத்தத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் காமெடி சரவெடி.