Categories
உலக செய்திகள்

அப்படி போடு…!! “ரிட்டையர் ஆகும் நாய்களுக்கும், குதிரைகளுக்கும் இனிமேல் பென்ஷன்”… வருகின்றது அதிரடி சட்டம்…!!

போலந்து நாட்டில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நாய்களுக்கும்,குதிரைகளுக்கும் பென்சன் வழங்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை கொண்டுவர இருக்கின்றது.

போலந்தில் திருடர்களை பிடிப்பதற்கு, போதை பொருட்களை கண்டறிவதற்கு, மீட்பு பணியில் ஈடுபவதற்கு  போன்ற சேவைகளுக்காக காவல்துறை,தீயணைப்பு துறை மற்றும் எல்லைக்காவல் துறை போன்ற இடங்களில்  நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இத்தனை வேலைகள் செய்தாலும் கூட அந்த நாய்களுக்கு சாப்பாடும், தங்குவதற்கு இடமும் மட்டுமே அரசால் கொடுக்கப்படுகின்றது. இதுமட்டுமன்றி பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாய்களுக்கும் குதிரைகளுக்கும் அரசு பாதுகாப்பு வழங்கப்படாது.

இதனால் பணி ஓய்விற்குப் பிறகு அந்த விலங்குகளின் நிலைமை பெரும் கேள்விக்குறியானது. இந்நிலையில் அரசு சேவையிலிருந்து பணி நிறைவடையும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு பென்சன் வழங்க போலந்தில்  புதிய சட்டம் ஒன்று கொண்டுவர அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இது எதற்காக என்றால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற விலங்குகளை வாங்கும் புது எஜமானர்களின் செலவைக் குறைப்பதற்காக தான்.

Categories

Tech |