நைஜர் நாட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரிய நாட்டின் மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் மக்கள் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் துப்பாக்கிச்சூடு போன்ற கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இந்த பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்காக ஏராளமானோர் மக்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இவைகள் அனைத்தையும் தாண்டி பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மேலும் மாலி நாட்டை ஒட்டிய எல்லைப்பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தஹவுவா நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிகளுடன் அதிரடி தாக்குதலை ஏற்படுத்தியுள்ளனர். இந்த பயங்கரவாதிகள் தங்களது கொலைவெறி தாக்குதலை மக்கள் குடியிருக்கும் இன்தாஜாயென் மற்றும் பகோராதே போன்ற பகுதிகளில் வீடுகளை தீ வைத் கொளுத்தியுள்ளனர்.
அது மட்டுமன்றி பல மக்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இத்தாக்குதலில் மக்கள் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதே போன்ற பயங்கரவாத தாக்குதலில் கடந்த வாரம் 58 பேரை கொன்றுள்ளனர். சோம்பங்கவ் மற்றும் ஜரவும்டேரெய் போன்ற இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.