Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்… 14 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தலை கணத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. மேலும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் நாடு முழுவதும் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் அந்நாட்டின் வட மத்திய மாகாணமான நைஜீரியாவில் இருக்கின்ற உகுரு என்ற கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவர்கள் அப்பகுதியில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவி சுடுவது போல் சுட்டு தள்ளினர். அதுமட்டுமன்றி வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பணம் மற்றும் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலும் கால்நடைகளையும் திருடி சென்றுள்ளனர். கொள்ளை கும்பலின் கொடூரமான தாக்குதலில் ஒரு பெண் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சில படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நடந்த கிராமத்திற்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

Categories

Tech |