நகை அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து காவல்துறை சார்பாக நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு நகைகளை பாதுகாப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் துணை சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமை தாங்கி கூறியதாவது, நகை அடகு மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கடையில் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும், பின் கடைக்கு சந்தேகப்படும்படியாக வரும் நபர்கள் பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், பின்னர் நகைகள் வைக்கும் பெட்டக வசதி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மேலும் இரவு நேரங்களில் காவலுக்கு வாட்ச்மேன் வைத்து பாதுகாப்பது நல்லது என அவர் கூறியுள்ளார்.