Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் லஷ்மி என்பவர் வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது திண்டுக்கல் செல்கின்ற அரசு பேருந்தில் ஏறி காரைக்குடியில் இருக்கும் பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி உள்ளார்.

இதில் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக லக்ஷ்மி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |