பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அந்தோணிமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அந்தோணிமேரி தூங்கிக் கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அந்தோணிமேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.