ஆசிரிய தம்பதி வீட்டில் பணம் மற்றும் நகையை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள வசந்தம் நகர் பகுதியில் கேசுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியரோசி இவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு தங்களின் பள்ளிக்கு சென்று விட்டு மாலை நேரம் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆசிரிய தம்பதியினர் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று கைரேகை எதுவும் பதிவாகி இருக்கின்றதா என ஆய்வு செய்துள்ளனர். இதில் தடயம் கிடைக்காத காரணத்தினால் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்காமல் நின்றுள்ளது.