Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆலய திருவிழாவிற்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மீன் வியாபாரம் செய்யும் பெண் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னதுரை மீனவ கிராமத்தில் மரியம்மை என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்தவ ஆலய திருவிழா நடப்பதால் அதில் கலந்து கொள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மரியம்மை ஆலய விழாவிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்ததில் 8000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 3/4 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்துள்ளது. பின்னர் இவர் விழாவுக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் தங்களின் கைவரிசையை காட்டியது தெரியவந்துள்ளது. இது பற்றி மரியம்மை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |