Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நகை-பணம் கொள்ளை…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

ஒருவரின் வீட்டில் நகை,பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி நகர் பகுதியில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியூர் சென்றிருக்கிறார். இந்நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் சாதிக் பாஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின் அவரின் உறவினர் உதவியுடன் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 42 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் இரண்டு பவுன் தங்க நகை போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |