மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் வெள்ளிக் கொலுசுகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரிமளா என்பதும், தற்போது வாணியந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும், பின்னர் எரவார் கிராமத்தில் வசிக்கும் மின் ஊழியரான பழனிமுத்து என்பவர் வீட்டில் புகுந்து நகைகளை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பரிமளாவை கைது செய்து அவரிடமிருந்த 5 3/4 பவுன் தங்க நகை மற்றும் 2 ஜோடி வெள்ளி கொலுசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.