Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிய போனது தப்பா….? அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். பாண்டியராஜன் டெல்லியில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருக்கிறார். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரேணுகா வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதனையடுத்து  திரும்பி வந்த ரேணுகா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதன்பின் ரேணுகா வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில்  இருந்த 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளதை அறிந்தார்.இதுகுறித்து ரேணுகா  குன்றக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள்  அங்கு பதிவான தடயங்களை சேகரித்துள்ளனர்.இச்சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 25 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |