Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்றச்சாட்டுகள்…. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

நகராட்சியை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு சங்கம் சார்பாக நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாவட்ட செயலாளர் சரவணன், முருகேசன் மற்றும் சின்ன கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்தை கூட்டமைப்பு தலைவர் ரங்கன் தொடங்கி வைத்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, குப்பைகள் கொட்ட இடம் ஒதுக்கித் தருமாறும், பேட்டரி வண்டிகளை நகராட்சி நிர்வாகமே பழுது நீக்கி தருமாறும்  5 வருடங்களாக பணியாளர்களுக்கு காலணிகள் வழங்கப்படாமல் இருப்பதையும், தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கூடாது எனவும், சமீபத்தில் பிடித்தம் செய்யப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டையை இன்னும் வழங்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |