நகராட்சியில் பணிபுரிந்த பெண் ஊழியர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினரை வரவழைத்து கிணற்றில் இருந்த ஜோதியின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
இதனை அடுத்து இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஜோதி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நகராட்சியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்திருக்கிறார். ஆனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பணியிலிருந்து நின்றுள்ளார்.
இதனை தொடர்ந்து கொரோனோ ஊராடங்கால் கடந்த சில மாதங்களாக போதிய வருமானமின்றி தவித்து வந்த நிலையில், அவர் நகராட்சி அலுவலர்களிடம் மீண்டும் வேலை கேட்டு வந்துள்ளார். ஆனால் தற்போது ஜோதி நகராட்சி அலுவலகத்தில் இருக்கும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.