Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திமுக – அதிமுக கடும் போட்டி…. வெற்றிவாகை சூட போவது யார்….? பொதுமக்கள் எதிர்பார்ப்பு….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிவாகை சூட போவது யார் என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் ஊராட்சி கடந்த 1953-ஆம் வருடம் முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. கடந்த 2011-ம் வருடம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த பேரூராட்சியில் 4,952 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவற்றில் 18,605 நபர்கள் இருகின்றனர். இந்த நகரின் மொத்த பரப்பளவானது 11.69 சதுர கிலோ மீட்டர் என கூறப்படுகிறது. இதனையடுத்து தியாகதுருகம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வேளாண்மை அலுவலகம், போலீஸ் நிலையம்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 11 அரசு பள்ளிகள், ஒரு மாணவர் விடுதி, 2 மாணவிகள் விடுதி மற்றும் 13 தேசிய வங்கிகள் ஆகியவைகள் அமைந்துள்ளது.

பின்னர் பேரூராட்சியில் இருக்கின்ற 15 வார்டுகளில் 1, 4, 6, 8, 10 ஆகிய 5 வார்டுகள் பொது பிரிவினருக்கும், 2, 7 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடருக்கும், 3, 9, 11, 12, 13, 14 ஆகிய 6 வார்டுகள் பெண்களுக்கும், 5, 15 ஆகிய வார்டுகள் ஆதிதிராவிடர் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த முறை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க-வை சேர்ந்த விஜயராஜ் பேரூராட்சி மன்றத் தலைவராகவும் மற்றும் கன்னியம்மாள் கணேசன் துணை தலைவராகவும் வெற்றி பெற்று பதவி வகித்துள்ளனர். ஆனால் தற்போது நடைபெற இருக்கின்ற தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவி ஆதிதிராவிடர் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டதால் தலைவர் பதவியை கைப்பற்ற போவது பெண்ணா, ஆணா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து தியாகதுருகம் பேரூராட்சி சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும் மாடு, ஆடு, காய்கறி வாரச் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதன் பின் கூடுதலாக வருவாய் கிடைக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளில் குத்தகை கட்டணத்தை புதுப்பிக்க வேண்டுமாறும், பேரூராட்சிக்கு உள்பட்ட குளங்களை தூர்வார வேண்டும் எனவும், 30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்து இருக்கின்றதை மாற்றி விட்டு புதிதாக குடிநீர் குழாய்கள் அமைத்து தரவேண்டும் எனவும், உதயமாம்பட்டு பகுதியில் சாலையோரம் குப்பை கொட்டுவதை தவிர்க்குமாறும், கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. மேலும் இந்த பேரூராட்சியை ஏற்கனவே அ.தி.மு.க கைப்பற்றி இருந்தாலும் தற்போது ஆளுங்கட்சியாக தி.மு.க இருக்கின்றதால் பேரூராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற அக்கட்சியினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Categories

Tech |