நக்ஷத்ரா நாகேஷ் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் நக்ஷத்ரா நாகேஷ். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”தமிழும் சரஸ்வதியும்” என்ற சீரியலில் நடிக்கிறார். சமீபத்தில், இவர் தனக்கும் ராகவ் என்பவருக்கும் காதல் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நக்ஷத்ரா நாகேஷின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.