Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையில் அதிகம் சிக்கிட்டு…. நல்ல விலைக்கு போகும்… நடைபெறும் தீவிர பணிகள்…

மீனவர்கள் வலையில் சிக்கிய பெரும்பாலான நெத்திலி மீன்களை கருவாடாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்ட 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளங்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இங்கு இருக்கக்கூடிய விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து கரை திரும்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வள்ளம், கட்டுமரங்கள் மட்டுமே கொண்டு மீன்வர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற வள்ளம், கட்டுமரம் மீனவர்களின் வலைகளில் அதிகமாக நெத்திலி மீன்கள் கிடைத்துள்ளது. அவற்றை மீனவர்கள் துறைமுக ஏல கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர்.

அதில் ஒரு கூடை நெத்திலி மீன்கள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூடை 2,500 ரூ முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து அதிகமாக இருப்பதனால் விற்பனையாகாத பெரும்பாலான நெத்திலி மீன் கருவாடாக மாற்றுவதற்கு கடற்கரை பகுதி, குளச்சல் பாலம், துறைமுக வளாகம் என அனைத்து இடங்களிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இங்கு தயார் செய்யப்படும் கருவாடுகளுக்கு வெளியூர்களில் அதிக விலை இருக்கின்றது. இதனால் சென்னை, திருச்சி போன்ற வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் நெத்திலி கருவாடு அனுப்பி வைக்கப்படுகிறது.

Categories

Tech |