Categories
தேசிய செய்திகள்

நாளை அயோத்தியில் பூமி பூஜை…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு….!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மிகுந்த பாதுகாப்புடன் நாளை நடைபெற இருக்கின்றது.

ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோயில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பகல் 12.15 மணியளவில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்ட உள்ளார்.அந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்ற இந்த விழா நேற்று காலையில் கௌரி விநாயகர் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

அடிக்கல் நாட்ட உள்ள ராமஜென்ம பூமி வளாகத்தில் வாரணாசி, அயோத்தி பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளில் இருக்கின்ற 21 சாமியார்கள் மூலம் இந்த சடங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா காரணமாக அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மேலும் வன விலங்குகள் மூலமாக முக்கிய இடங்கள் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் அயோத்தியில் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |