Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை

நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்…!!

கிருஷ்ண ஜெயந்தி முதலில் பூஜைக்குரிய பொருட்களை பார்ப்போம். பூஜைக்குரிய இலை துளசி இலை, பூஜைக்குரிய மலர் மல்லிகை, நிவேதனப் பொருட்கள் பால், வெண்ணை, தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன. படிக்க வேண்டிய நூல் பகவத் கீதை, கிருஷ்ண அஷ்டோத்ரம் ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஸ்டோத்திர நாமாவளி, ஸ்ரீ மத் பாகவதம், மகாபாரதம் கதைகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில் கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணையை தடவி விடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருட்களாக பழங்கள், பணம் ஆகியவற்றை கட்டிவிடுவார்கள். வழுக்கு மரத்தின் மீது ஏறி உச்சியில் இருக்கும்  பரிசு பொருளை எடுக்க வேண்டும்.

இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப் பொருட்களை பிடிக்க முயலும் போது தண்ணீரை அவர்கள் மீது ஊற்றுவார்கள். எண்ணெய் பூசப்பட்ட மரம் வலுக்கும். தண்ணீரை ஊற்றும் போது மேலும் வலுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்கு மரத்தில் ஏறி பரிசு பொருளை அடைந்து விடுவார்கள். உரி ஒன்றில் சிறு மண்சட்டி ஒன்றை கட்டிவைத்து கயிற்றில் தொங்க விட்டிருப்பார்கள். கம்பால் உரியில் உள்ள சட்டியை உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது, கயிறை மேலும் கீழும் ராட்டினம்  போன்ற கருவி மூலம் இழுப்பார்கள்.

அப்போது பெண்கள் உரியை அ டிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது, தண்ணீரை ஊற்றி தடை செய்ய முயற்சிப்பார்கள். சிரமம்பட்டு  யாராவது ஒருவர் கம்பால் உரியில்  உள்ள சட்டியை உடைத்து விடுவார்கள். அவருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும். விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் நடைபெறும். இது கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணை திருடிய நிகழ்ச்சியை  நினைவு கூறவே நடத்தப்படுகிறது. கிருஷ்ணஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர் சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும்.

அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ மாணவிகளுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்திசாலித்தனம் கூடும். அது ஒரு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை பாத சுவட்டை மூலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி வழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில், சைவ வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள். குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு 8 போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல்கள் இருக்கும். அதாவது ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரமும், ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒன்றிணைந்து இருப்பதை இந்த திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணெய் திருடித் தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணா கால் தடம் பதிந்தது. அதை நினைவுபடுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது. சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின் போது முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி கிருஷ்ண கானங்களை இசைத்தபடி, சிலர் கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரை  சுற்றி வந்து உற்சவரை  திரும்பவும் ஆலயத்திற்குள் எழுந்தருளச் செய்வார்கள். கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாடவேண்டும். ஆதிசங்கரர் சென்ற இடங்களிலெல்லாம் பஜகோவிந்தம் பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

Categories

Tech |