Categories
சினிமா தமிழ் சினிமா

நலன்குமாரசாமி இயக்கும் புதிய படம்… ஹீரோ யார் தெரியுமா ?…!!!

இயக்குனர் நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனர் நலன் குமாரசாமி நடிகர் விஜய் சேதுபதியின் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கி பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தை இயக்கினார் . இதன்பின் இவர் சமீபத்தில் வெளியான ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தாலஜி படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் நடித்த குறும்படத்தை இயக்கியிருந்தார் .

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா | arya in nalan kumaraswamy direction -  hindutamil.in

இந்நிலையில் இயக்குனர் நலன் குமாரசாமி அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . தற்போது நடிகர் ஆர்யா நடிப்பில் டெடி ,சார்பட்டா பரம்பரை ,எனிமி ஆகிய படங்கள் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |