Categories
மாநில செய்திகள்

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு” 1 மாத பரோலில் வெளி வந்தார் நளினி..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி  1 மாத பரோலில் வெளி வந்துள்ளார் 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில்  தண்டனை அனுபவித்து வரும் நளினி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக நீதிமன்றத்தில் 6 மாதம் பரோல் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் 1 மாத பரோல் வழங்கியது. இந்நிலையில் சிறையில் இருந்து 1 மாத பரோலில் பலத்த பாதுகாப்புடன் நளினி சத்துவாச்சாரியில் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Image result for நளினி

மேலும் ஊடகங்களிடம் பேசக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 24 மணிநேர பாதுகாப்புடன் பரோலில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்களுடன் மட்டுமே பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |