ராஜிவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்கு பரோல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி , முருகன் , சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நளினி தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் அவருக்கு ஜூலை 25_ஆம் தேதி முதல் இரண்டு வாரம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து மேலும் தனது பரோலை நீட்டிக்க வேண்டுமென்று நளினி மனு தாக்கல் செய்தார். இதனை ஏற்ற நீதிமன்றம் நளினிக்கு ஒரு மாதம் காலம் பரோல் வழங்கியது. இதை தொடர்ந்து மேலும் 2_ஆவது முறையாக பரோலை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் இலங்கையில் உள்ள தனது மாமியார் நிஷா பிரச்சனையின் காரணமாக இந்தியா வர தாமகுவதாக கூறப்பட்டதோடு மேலும் பரோலை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இரண்டாவது முறையாக பரோல் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.