நலிவடைந்த கலைஞர்களுக்காக நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் .
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் . இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகிறது .
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . நடிகர் மோகன்லால் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ‘நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் விதமாக நாங்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார் .