Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(02.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

02-05-2020, சித்திரை 19, சனிக்கிழமை

இராகு காலம் – காலை 09.00-10.30

எம கண்டம் மதியம் 01.30-03.00

குளிகன் காலை 06.00-07.30

நாளைய ராசிப்பலன் –  02.05.2020.

 

மேஷம்

இன்று உங்கள் உடல்நலம் சோர்வாகவும் மந்தமாகவும் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். எதிர்பாராத உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம்.

ரிஷபம்

இன்று உங்கள் செயல்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்

குடும்பத்தில் இன்று சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். கடன் பிரச்சினைகள் தீரும். வெளியூர் பயணங்களால் புதிய நட்பு உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டு.

கடகம்

குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் நற்செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வியாபாரம் சம்பந்தமாக வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

சிம்மம்

எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வருமானம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

குடும்பத்தில் இன்று  வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் தொடர்பாக தொலைதூரப் பயணங்களால் நன்மை கிட்டும்.

துலாம்

இன்று பயணங்களின் மூலம் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

விருச்சிகம்

பொருளாதாரம் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தனுசு

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு நன்மை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல்கள் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலை மிக சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு.

மீனம்

இன்று வியாபாரத்தில் நண்பர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

Categories

Tech |