04-05-2020, சித்திரை 21, திங்கட்கிழமை
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00
நாளைய ராசிப்பலன் – 04.05.2020
மேஷம்
இன்று உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளால் இருந்த பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் கிடைக்கும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகள் வெளியாக மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல செய்திகள் வந்து சேரும். எடுக்கும் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். வெளியில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
குடும்பத்தில் இன்று நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாகலாம். பெற்றோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. வேலையில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உண்டாகும். புதிய பொருட்கள் சேரும். தொழில் தொடர்பாக உள்ள பிரச்சினைகள் முடிவடைந்து மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஒருசில உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில் தொடர்பாக வேலைப்பளு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ப நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
கன்னி
இன்று எந்த ஒரு செயலையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். தொழில் தொடர்பாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் விலகி ஒற்றுமை கூடும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
துலாம்
குடும்பத்தில் இன்று வீண் செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். உடனிருப்பவர்களே சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் தொடர்பாக புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று பிள்ளைகளால் நன்மை உண்டு. உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கஷ்டங்கள் நீங்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைத்து தேவைகள் பூர்த்தி ஆகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். பொதுவாக வேலைப்பளு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்களின் மீது தேவையில்லாமல் கோபம் உண்டாகலாம்.உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
மீனம்
உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும்,தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பெற்றோர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.