05-08-2020, ஆடி 21, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00.
நாளைய ராசிப்பலன் – 05.08.2020.
மேஷம்
உற்றார் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். காலையிலேயே நற்செய்திகள் வந்து சேரும். பொருளாதாரத் தேவைகள் எளிதில் நிறைவேறும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் வெற்றி உண்டு.
ரிஷபம்
சகோதர சகோதரிகளின் வழியாக சுபச் செய்திகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். உத்தியோகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். காலதாமதம் உண்டாகும். தன வரவு சுமாராக தான் இருக்கும். தொழிலில் ஈடுபடுபவர்கள் சுறுசுறுப்பாக செய்வதால் நல்ல லாபத்தை பெற முடியும்.
கடகம்
உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்திலும் ஒரு சில பாதிப்புகள் உண்டாகலாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்படுவது நன்மை கொடுக்கும்.
சிம்மம்
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் வெற்றிகரமாக இருக்கும்.
கன்னி
சிலருக்கு வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சிறப்பான பணவரவும், மகிழ்ச்சியும் ஏற்படும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள்.
துலாம்
வரவும் செலவும் சமமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கடன்கள் குறையும். உடல்நிலையில் சோர்வும், அசதியும் உண்டாகும். எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும். ஆரோக்கியத்திற்காக மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். பணிகளில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
தனுசு
ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். மிக கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் நிறைவேறும். மன மகிழ்ச்சி உண்டாகும். துணிச்சலோடு செயல்படுவீர்கள்.
மகரம்
உத்தியோகத்தில் வேலைச்சுமை சற்று அதிகமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. பணப்புழக்கம் சற்று குறையும். சிக்கனமாக செயல்படுவதால் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் ஈடுபடுபவர்கள் நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம்
குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். திறமையை வெளிப்படுத்தும் நாளாக இன்று இருக்கும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.
மீனம்
பிள்ளைகளால் மனக் கசப்புகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் குறையும். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு.