Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(06.08.2020)நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

06-08-2020, ஆடி 22, வியாழக்கிழமை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.

நாளைய ராசிப்பலன் –  06.08.2020.

மேஷம்

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

தொழில் தொடர்பான வெளியூர் நபர் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருப்பவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.

மிதுனம்

பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும். பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ப லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோம் நண்பர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கடகம்

பிறரை நம்பி பெரிய தொகையை கடனாகக் கொடுக்க வேண்டாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் வாங்கும் கடன்களுக்கு முன்ஜாமீன் ஏதும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்மம்

பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை குறையும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

கன்னி

தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

துலாம்

எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராகத்தான் இருக்கும்.

விருச்சிகம்

பயணங்களால் அனுகூலம் உண்டு. எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. நினைத்த காரியம் பாதியிலேயே தடைபடலாம். வியாபாரம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் நீங்கும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் நற்செய்திகள் வந்து சேரும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நிதானத்துடன் சிந்தித்து செயல்படுவதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கும்பம்

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் செய்வதற்கான அனுகூலமான நாள்.

மீனம்

உற்றார் உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில் தொடர்பாக பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். சேமிப்பு குறையும்.

Categories

Tech |