Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(07.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

07-06-2020, வைகாசி 25, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30.

நாளைய ராசிப்பலன் –  07.06.2020

மேஷம்

எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மன நிம்மதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டு.பிள்ளைகளால் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ரிஷபம்

கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதை தவிர்க்கவும். தேவையில்லாமல் கோபப்படும் சூழல் உருவாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

மிதுனம்

குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும்.

கடகம்

உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

சிம்மம்

உங்கள் உடல் நிலையில் ஒரு சில உபாதைகள் வந்து நீங்கும். செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிக்க முடியும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டு.

கன்னி

பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

தொழில் தொடர்பாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

இன்று எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதம் ஆகலாம். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உருவாக்கும். தேவையில்லாத செலவுகளால் சேமிப்புகள் குறையும். பணப்பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனம் தேவை.

தனுசு

உங்களுக்கு சுபச்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.

மகரம்

குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியுடன் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

கும்பம்

இன்று புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மீனம்

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். வருமானம் பெறுவதற்காக வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமையாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.

 

Categories

Tech |