08-08-2020, ஆடி 24, சனிக்கிழமை.
இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30.
நாளைய ராசிப்பலன் – 08.08.2020.
மேஷம்
பிள்ளைகளால் மன நிம்மதி குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
ரிஷபம்
உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அதிகாலையிலேயே நற்செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மிதுனம்
சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். மனதிற்கு புது தெம்பு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டு.
கடகம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதால் கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு அதிகரிக்கும். தொழிலில் வெளியூர் தொடர்பாக அனுகூலம் உண்டு. உடல்நிலை சற்று மந்தமாக காணப்படும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பாக மருத்துவ செலவுகள் உண்டாகலாம். வியாபாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
கன்னி
திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டு. கொடுத்த கடன்கள் வசூலாகும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் ஒற்றுமையாக செயல்படுவீர்கள்.
துலாம்
பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டில் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
விருச்சிகம்
உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை உண்டாகும். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டு.
தனுசு
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூல பலன் உண்டு. எடுத்த காரியம் வெற்றி பெற பொறுப்புடன் செயல்படுவது நல்லது. பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
மகரம்
பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வம்பு வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டு. நண்பர்கள் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.
கும்பம்
உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். பொறுமையுடன் இருப்பது நல்லது. மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
மீனம்
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வேற்றுமொழி நபர்களால் அனுகூலம் உண்டு. எடுத்த காரியத்தை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும்.