09-07-2020, ஆனி 25, வியாழக்கிழமை.
இராகு காலம் – மதியம் 01.30-03.00
எம கண்டம்- காலை 06.00-07.30
குளிகன் காலை 09.00-10.30.
நாளைய ராசிப்பலன் – 09.07.2020
மேஷம்
நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும். பெண்கள் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகள் வழியில் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மன நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
தர்ம காரியங்களை செய்வதால் மன மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். உத்தியோகம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரக் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
மிதுனம்
சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும்,சுறுசுறுப்பின்மையும் காணப்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.
கடகம்
எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்பதால் பிரச்சனையை குறையும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுப செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும்.
கன்னி
சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும், பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
துலாம்
தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் தொடர்பாக இருந்த நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பண பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனுடன் செயல்பட வேண்டும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவிகள் பிரச்சினையைத் தீர்க்கும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்யக் கூடும்.
தனுசு
வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மகரம்
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையலாம். சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
கும்பம்
குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும். திருமணம் தொடர்பான காரியங்களில் அனுகூலமான பலன் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பாக தொலைதூரப் பயணங்கள் செல்ல நேரிடலாம்.
மீனம்
உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை ஏற்படும். பெரியவர்களின் கஷ்டங்களுக்கு மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம்.