10-08-2020, ஆடி 26, திங்கட்கிழமை.
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00.
நாளைய ராசிப்பலன் – 10.08.2020.
மேஷம்
உங்கள் திறமைகளை வெளிபடும் நாள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் வெற்றியைகொடுக்கும். பொருளாதார தேவைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்
வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் சகஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும்.
மிதுனம்
எடுக்கும் காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள்உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும்.
கடகம்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்உண்டு. உத்தியோக தொடர்பான பிரச்சினைகள் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் குறையும்.
கன்னி
உங்களுக்கு ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும்.
துலாம்
சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் சகஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிச்சுமை குறையும். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்களால் நல்ல செய்தி கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்உண்டு. பழைய கடன்கள் வசூலாகும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்து லாபம் பெருகும்.
தனுசு
நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மன கசப்புகள் ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள்உண்டு. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை.
மகரம்
உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களி்ன் ஆதரவும், ஒத்தழைப்பும் கிடைக்கும்.
கும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் பிரச்சினைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் வேலை ஆட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனைஉண்டு. எதிலும் நிதானம் தேவை.