12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30
நாளைய ராசிப்பலன் – 12.07.2020.
மேஷம்
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகலாம். எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலனை பெற முடியும்.
ரிஷபம்
பிள்ளைகளால் உங்கள் மதிப்பு உயரும். அதிகாலையிலேயே சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.
மிதுனம்
தொழிலில் அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன்களைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
கடகம்
இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் வீண் செலவுகள் உண்டாகலாம். தொழிலில் புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மந்தநிலை உண்டாகும்.
சிம்மம்
மற்றவர்களிடம் அதிகமாக பேசாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்நிலையில் சோர்வும், மனக்குழப்பமும் காணப்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்த்து நன்மையை கொடுக்கும்.
கன்னி
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் மன அமைதி உண்டாகும். புதிய நண்பர்கள் இணைவார்கள்.
துலாம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் குறையும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத வகையில் சுபச்செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில வியாதிகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் இருக்காது.
விருச்சிகம்
குடும்பத்தில் பெரியவர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகலாம். செய்யும் செயல்களில் ஒரு சில இடையூறுகள் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
தனுசு
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.எந்த செயலிலும் வெற்றி காண்பிர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம்.
மகரம்
வியாபாரம் தொடர்பாக வெளிமாநில நபர் மூலம் அனுகூலமான பலன் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திடீர் பண வரவு உண்டாகும்.
கும்பம்
வண்டி வாகனங்களால் செலவுகள் உண்டாகலாம். தொழில் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலமான பலன் உண்டு. உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதங்கள் ஏற்படும். சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
மீனம்
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகுலமான பலன் உண்டு.வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.