15-07-2020, ஆனி 31, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00
நாளைய ராசிப்பலன் – 15.07.2020.
மேஷம்
சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் சேர்வார்கள். வருமானம் அதிகரிக்கும்.
ரிஷபம்
கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படக் கூடிய சூழ்நிலை உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மிதுனம்
ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். திடீர் தனவரவு உண்டாகும். பொன்,பொருள் சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புகழ் மேலோங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் செய்ய நேரிடலாம். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
சிம்மம்
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களால் அலுவலகத்தில் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மந்த நிலை ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி
தேவையில்லாத மனக் கவலைகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். பயன்களை தள்ளிவைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.
துலாம்
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சுபகாரியங்கள் கைகூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
தனுசு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்க்கு நம்பிக்கையை கொடுக்கும். சுப காரியங்களில் தடைகள் உண்டாகும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
மகரம்
கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகலாம். சகோதர சகோதரிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் மனக்கசப்பும் உண்டாகலாம்.
கும்பம்
குடும்பத்தில் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிரிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும்.
மீனம்
பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.