Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(19.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

19-07-2020, ஆடி 04, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30.

நாளைய ராசிப்பலன் –  19.07.2020.

 

மேஷம்

குடும்பத்தில் பிள்ளைகளால் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த தயக்கங்கள் விலகி லாபம் கிடைக்கும். நம்பிக்கையும்.சுறுசுறுப்பும் உருவாகும். பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை மற்றும் அசதி உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு ஆடம்பர பொருள் சேர்க்கை ஏற்படும். சகோதர சகோதரிகள் வழியில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிதுனம்

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

கடகம்

குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. கடன்கள் சற்று குறையும். பெரிய  மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

சிம்மம்

உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும்.

கன்னி

சிக்கனமாக செயல்படுவதால் செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் நற் செய்திகள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்

துலாம்

தன வரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும். வீட்டில் பெண்களின் வேலைச்சுமை குறையும். மனநிம்மதி உண்டாகும். திருமண முயற்சிகளில் தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தாமதம் உண்டாகலாம். எதிலும் கவனம் தேவை. பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.

தனுசு

உடல் நிலை சீராகும். பிள்ளைகளால் சுபச் செய்திகள் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பெற்றோரில் மனஸ்தாபங்கள் விலகும்.

மகரம்

நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டு. வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு. செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும்.

கும்பம்

தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மனக் கசப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு.

மீனம்

பிள்ளைகளால் எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். சுபகாரிய முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். பிரச்சினைகள் சற்று குறையும்.

Categories

Tech |