20-07-2020, ஆடி 05, திங்கட்கிழமை
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00
நாளைய ராசிப்பலன் – 20.07.2020.
மேஷம்
பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேளையில் பல மாற்றங்கள் முன்னேற்றத்தைக் கொடுக்கும். வியாபாரத்தில் வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்
செய்யும் செயல்களில் ஆர்வம் இன்றி காணப்படுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். உறவினர்கள் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
எதிர்பாராத வகையில் பணவரவு கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டு. உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.
கடகம்
உறவினர்களின் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். இனிய செய்தி இல்லம் தேடி வந்து சேரும். தொழிலில் புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தி லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களில் நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
கன்னி
எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
துலாம்
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளால் கடன்கள் வாங்க நேரிடலாம். தொழிலில் ஒரு சில மாறுதல்களை செய்வதால் லாபத்தை பெற முடியும்.
விருச்சிகம்
பூர்வீக சொத்துக்கள் வெளியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சலை அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்/ செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
மகரம்
பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது நல்லது.
கும்பம்
தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளிவட்டார நட்பு சிறப்பாக இருக்கும்.
மீனம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். வங்கி மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பிள்ளைகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள்.