Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(21.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

21-06-2020, ஆனி 07, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30.

நாளைய ராசிப்பலன் –  21.06.2020

மேஷம்

உங்களுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். பிள்ளைகளோடு இருந்த மனக்கசப்புகள் நீங்கும். திருமண சுப முயற்சிகளில் முன்னேற்றம் காணப்பட்டும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

மருத்துவச் செலவுகளில் சில தொகை செலவாகலாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளால் மனக்கசப்பும் உண்டாகலாம். குடும்பத்தில் ஆதரவாகச் செயல்படுவார்கள். கடன் பிரச்சனை குறையும்.

மிதுனம்

மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பொண்,பொருள் வாங்கும் யோகம் உண்டு.

கடகம்

குடும்பத்தில் உறவினர்கள் வழியாக சுபச் செய்திகள் வந்து சேரும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

சிம்மம்

உறவினர்கள் வழியாக நற்செய்திகள் கிடைக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டு. எந்த செயலிலும் மன மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

கன்னி

உங்களுக்கு செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

துலாம்

நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கை, கால் வலி. உடல் சோர்வு போன்ற சிறுசிறு உபாதைகள் தோன்றும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் காணப்படும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பாதிப்பு உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை குறையும். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

தனுசு

நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

மகரம்

உங்கள் திறமையால் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டு. பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

கும்பம்

சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் உண்டாகும். எதையும் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மீனம்

உங்களுக்கு குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிலும் காலதாமதம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஒரு அளவு குறையும். செய்யும் செயல்களில் ஆர்வம் குறையும்.

Categories

Tech |