Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(22.06.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

22-06-2020, ஆனி 08,திங்கட்கிழமை.

இராகு காலம்-  காலை 07.30 -09.00

எம கண்டம்- 10.30 – 12.00

குளிகன்- மதியம் 01.30-03.00

நாளைய ராசிப்பலன் –  22.06.2020

மேஷம்

நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில் தொடர்பாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்

உறவினர்களால் வீண் பிரச்சனைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தின் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்களுடன் மூலம் லாபம் பெற முடியும்.

மிதுனம்

உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். உத்தியோகம் தொடர்பாக வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான நிலை காணப்படும். வியாபாரத்தில் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டு.

கடகம்

புதிய நண்பர்கள் இணைவார்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். பண நெருக்கடியை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்

எந்த ஒரு கடினமான செயலையும் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் தொடங்க வங்கிக் கடன் எளிதில் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

கன்னி

பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

துலாம்

உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படுவது நல்லது. குடும்ப பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக கூடும். வேளையில் சக நண்பர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சஞ்சலங்கள் உண்டாகலாம். சுபகாரியங்களை தவிர்க்கவும். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.

தனுசு

ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதால் ஆனந்தம் அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு.

மகரம்

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.

கும்பம்

பணவரவு தாராளமாக அமைந்தாலும் செலவுகள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் தீரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

மீனம்

இன்று நிம்மதி இன்றி காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் நன்மை உண்டு. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தையில் இழுபறி உண்டாகும்.

 

Categories

Tech |