25-05-2020, வைகாசி 12, திங்கட்கிழமை.
இராகு காலம்- காலை 07.30 -09.00
எம கண்டம்- 10.30 – 12.00
குளிகன்- மதியம் 01.30-03.00.
நாளைய ராசிப்பலன் – 25.05.2020
மேஷம்
குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகலாம். சுபகாரியங்களை அனுகூல பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும்.அனுபவமிக்கவர்களின் அறிவுரைகளால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
ரிஷபம்
எதிர்பார்த்த வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டில் பெரியவர்கள் இருந்த மனக்கசப்புகள் உண்டாகலாம். தொழிலில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் காணலாம்.
மிதுனம்
நீங்கள் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பொருளாதாரம் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
வியாபாரத்தில் நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உற்றார் உறவினர்களால் நன்மையுண்டு. உங்களின் வேலைகளை சக ஊழியர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
சிம்மம்
இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறலாம். வேலையில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். தொழிலில் நண்பர்களின் ஒத்துழைப்பால் நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி
வீட்டில் சுபச் செலவுகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பணிச்சுமையை குறைக்கும்.
துலாம்
பிள்ளைகளால் மன உளைச்சல்கள் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும். எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகலாம். பிறரை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
தனுசு
பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.
மகரம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு. குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
கும்பம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.
மீனம்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் புதிய முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலன் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் ஒரு சில இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது.