27-05-2020, வைகாசி 14, புதன்கிழமை.
இராகு காலம் மதியம் 12.00-1.30
எம கண்டம் காலை 07.30-09.00
குளிகன் பகல் 10.30 – 12.00.
நாளைய ராசிப்பலன் – 27.05.2020
மேஷம்
மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகலாம். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும். வேளையில் எதிர்பாராத பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டு. குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகலாம்.
ரிஷபம்
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளில் வெற்றி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் தொடர்பாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கடகம்
பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பாக இருந்த மனக்கவலைகள் குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் வந்து சேரும். தொழிலில் இருந்த மந்தநிலை நீங்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
சிம்மம்
உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும், செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளில் சிறு தடைகள் நேரலாம்.
கன்னி
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலம் உண்டு. அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும்.
துலாம்
எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய நண்பர்களின் சேர்க்கையால் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நன்மை உண்டு.
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். திடீர் செலவுகள் உண்டாகலாம். உபயோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய சிந்தித்து செயல்படுவது அவசியம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள்.
தனுசு
பிறரிடம் தேவையில்லாமல் கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் கடன் வாங்குவது அல்லது கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மகரம்
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் குறைந்து, உடல் நலம் சீராகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
திடீர் பணவரவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.
மீனம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. உடன் இருப்பவர்களால் தடைகள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் புது நம்பிக்கையை கொடுக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.