27-06-2020, ஆனி 13, சனிக்கிழமை.
இராகு காலம் – காலை 09.00-10.30
எம கண்டம் மதியம் 01.30-03.00
குளிகன் காலை 06.00-07.30.
நாளைய ராசிப்பலன் – 27.06.2020
மேஷம்
பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தினருடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.தொழிலில் தொடர்பாக பெரிய மனிதர்களின் சந்திப்பு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
ரிஷபம்
பெரிய மனிதர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம்
உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். நண்பாக்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
கடகம்
பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் உண்டாகலாம். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நன்று.
சிம்மம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். தொழிலில் எதிரிகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
கன்னி
எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் புதிய நண்பர்களின் இணைவார்கள். வீட்டில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
துலாம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்
பிள்ளைகளால் வீட்டில் சுபச் செலவுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் இந்த எதிர்ப்புகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தனுசு
புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாக அனைவரும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் தொடர்பாக செல்லும் பயணங்களில் கவனம் தேவை. பெண்கள் பொருட்கள் வாங்குவதில் அதிகம் காட்டுவீர்கள்.
மகரம்
வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகலாம். மனநிம்மதி குறையும். வீண் பிரச்சனைகளை தவிர்க்கவும்.
கும்பம்
உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை காணப்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பது நல்லது. மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மீனம்
இல்லத்தில் மங்கல நிகழ்வுகள் நடைபெறும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் வேலை செய்பவர்கள் இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.