Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(28.04.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

 

 

28-04-2020, சித்திரை 15, செவ்வாய்க்கிழமை

இராகு காலம் மதியம் 03.00-04.30

எம கண்டம் காலை 09.00-10.30

குளிகன் மதியம் 12.00-1.30

நாளைய ராசிப்பலன் –  28.04.2020

மேஷம்

இன்று பிள்ளைகளால் உங்களுக்கு ஆனந்தமான நற்செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு திருப்தி அளிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்

இன்று வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் நீண்டநாட்களாக இருந்த தடைகள் விலகி நல்ல வாய்ப்புகள் அமையும். வருமானம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்க சிறந்த நாள். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்

இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செயல்பட்டு முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக வெளியூர் பயணங்கள் சாதகமான பலனைத் தரும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கடகம்

இன்று பிள்ளைகளால் உங்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக அமையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் அதிகரிக்கும். பணப் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் இன்று பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் சுமூகமான முறையில் முடிவடையும். உறவினர்களால் நன்மை உண்டு. அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி

இன்று தொழிலில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டு. உற்றார் உறவினர்களால் உங்கள் பிரச்சனை குறையும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

துலாம்

இன்று உங்கள் வேலைகளில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் இன்று பொறுப்புடன் செயல்படுவார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். தொழில் தொடர்பாக தொலைதூரப் பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை.இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

தனுசு

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொன், பொருள்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்

இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்களால் மன நிம்மதி குறையலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் அதிக லாபம் பெருகும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் தொடர்பாக நெருக்கடிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். எதிலும் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடலாம்.

 

Categories

Tech |