தனியார் இடத்தில் புகுந்த நல்ல பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான ஒரு இடத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நல்ல பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப்பகுதியில் விட்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.