திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மணல்கடத்தலின் போது மண் சரிந்து இளைஞர் ஒருவர் உயிர் இறந்தார்.
ஆரணி அருகே அத்திமலைப்பட்டி ஏரியில் அம்மாபாளையம் சேர்ந்த சுதாகர் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி நள்ளிரவில் மணல் அள்ளி உள்ளனர். அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேம் என்ற இளைஞர் மணல் அள்ளி ஏற்றிக் கொண்டிருக்கும் போது திடீரென மண் சரிந்து டிராக்டரில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பிரேம் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வருவாய் துறை அதிகாரிகளுடன் சென்ற கண்ணமங்கலம் போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு, இறந்தபின் பிரேமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்திமலைப்பட்டி ஏரியில் ஏற்கனவே இதே போல் மணல் கடத்தும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதன் பின்னரும் அதிகாரிகள் மணல் கடத்தலை தடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் தற்போது மேலும் ஒரு உயிர் பறிபோய் உள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.