Categories
மாநில செய்திகள்

நாங்க வாக்கிங் போறோம்…. நள்ளிரவில் வலம் வந்த சிங்கங்கள்…. வலைதளங்களில் வைரலான வீடியோ…!!

ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சாலையில் வலம் வந்த சிங்கங்களின் வீடியோ வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபவ் சாலையில் 2 சிங்க குட்டிகள் உட்பட  5 சிங்கங்கள் இரைத் தேடி நள்ளிரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளன. இதனையடுத்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த சிங்கங்கள்  தீடிரென துறைமுகத்தில் நுழைந்தன.

இதனைக் கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கியுள்ளனர். அதன்பின் அப்பகுதியில் உள்ள மக்கள் வன துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் சாலையில் சிங்கங்கள் நடந்து செல்லும் இந்த காட்சியானது வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

Categories

Tech |