மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் தடுப்பூசியை நீண்ட வரிசையில் நின்று போட்டுக் கொண்டுள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் கடுமையான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 66 836 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆகையால் தற்போது மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4161676 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 6 91851 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது வரை 344792 பேர் குணமடைந்துள்ளதாகவும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63252 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இந்தக் கொடிய கொரோனவைரசிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி போடுவது தான் என்று மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால் மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.