கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் காரணத்தினால் உயிரிழப்புக்களும் 14.44 கோடியாக உயந்துள்ளது.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத் தீ போல் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா நாடுகள் அடங்கியுள்ளது.
மேலும் உலக அளவில் சுமார் 14.44 கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 12.25 கோடி மக்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் சுமார் 30.70- லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.87 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மிகுந்த ஆபத்தில் உயிருக்கு போராடி வருபவர்களின் எண்ணிக்கை 1.09- லட்சமகா உள்ளது.