Categories
சினிமா தமிழ் சினிமா

‘நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’… ‘பூமி’ இயக்குனரின் விரக்தி பதிவு…!!!

‘நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ என ‘பூமி’ பட இயக்குனர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பூமி’ . இயக்குனர் லட்சுமண் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். பொங்கல் தினத்தில் ஓடிடியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பூமி படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘இதுவரை நான் பார்த்த படங்களிலேயே பூமி போன்ற ஒரு மோசமான படத்தை பார்த்ததில்லை சுறா ,ஆழ்வார், அஞ்சான் ,ராஜபாட்டை வரிசையில் இந்த படமும் இணைந்துள்ளது.

ஆரம்பம் முதல் முடிவு வரை எதுவுமே சரியாக இல்லை. இயக்குனர் லட்சுமணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி’  என கருத்து தெரிவித்து இருந்தார் . தற்போது ரசிகரின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குனர் லட்சுமண் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சார் நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த படம் எடுத்தேன். உங்களுக்காக தான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா ? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் . ப்ரோ நீங்க சிறப்பு ஜெயிச்சுட்டீங்க. நான் தோத்துட்டேன்’ என்று விரக்தியுடன் பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |