நடிகர் மகேஷ்பாபு தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபுவின் பிறந்த நாளாகும். அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தற்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் ஹைதராபாத்தில் அதிகரித்து வருகிறது. எனவே ஒரு சிறு அறிக்கையை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மகேஷ்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் ” அன்பான என் ரசிகர்களுக்கு என் கனிவான வேண்டுகோள். நீங்கள் அனைவரும் எனக்கு கிடைத்திருப்பதே ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.
A kind request to all my fans 🙏🏻 pic.twitter.com/UnAzeYPUBQ
— Mahesh Babu (@urstrulyMahesh) August 7, 2020
எனது பிறந்தநாளை விசேஷமானதாக, மறக்க முடியாத நாளாக மாற்ற நீங்கள் செய்யும் நற்செயல்கள் அனைத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த வருடம் சர்வதேச அளவில் நாம் கொரோனா தொற்றுடன் போராடி வருவதால் பாதுகாப்பு மிக அவசியம். எனது பிறந்தநாள் என்று பொது இடங்களில் என் ரசிகர்கள் யாரும் கூட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” தெரிவித்துள்ளார். “சரிலேரு நீக்கெவரு” என்ற படத்தை தொடர்ந்து பரசுராம் இயக்கத்தில் உருவாக இருக்கும் “சர்க்காரு வாரி பாட்டா” என்ற படத்தில் மகேஷ் பாபு கவனம் செலுத்தி வருகிறார். ஊரடங்கு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.