இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி அறிவித்தார்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறது. இந்தியாவிலும்கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவின் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு கொரோனா தொடர்பாக 4வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடையே பேசி வருகிறார் அதில் இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். ஊரடங்கால் சிலர் தங்களது குடும்பங்களை பிரிந்து இருப்பதை உணர முடிகிறது; கொரோனாவை கட்டுப்படுத்துவதில், நாம் பயணிக்கும் பாதை சரியானது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.