Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த நாமக்கல் மாணவர் பலி …..!!

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த நாமக்கல் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஊரடங்கு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவன் பலியாகியுள்ளார். உயிரிழந்த 22 வயதான லோகேஷ் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்தார்.லோகேஷ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் வேளாண் உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி பெற்று வந்தனர். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து ரத்தானதால் 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்து வந்தனர்.

நாமக்கல் நோக்கி வரும் வழியில் லாரிகளிலும் லோகேஷ்  உள்பட 30 பேர் பயணித்ததாக சொல்லப்படுகின்றது. தெலுங்கானாவின் பவுன்பாலிக்கு வந்தபோது 30 பேரும் அதிகாரிகளால் தடுத்து தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். முகாமில் இருந்த பள்ளி பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் உடல்நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |